சூலம் நாமயோகம். இது அசுப நாம யோகம் ஆகும். சூலம் நாமயோகத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் முரட்டுத்தனம் அலட்சியம் சோம்பல் எடுத்தெறிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட்டார்கள். எவருடனும் ஒத்துப் போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். இந்த நாம யோகத்தில் பிறந்தவர்கள் வீண் வம்புக்கு செல்பவர்களாகவும் சண்டை போடும் குணத்துடனும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உடலுறவு சுகத்தில் மிக அதிகமான ஆசை இருக்கும். கண்டபடி அளவற்ற காம சுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப்படுவது உண்டு.
யோகி நட்சத்திரம் - விசாகம்
யோகி கிரகம் - குரு
அவயோகி நட்சத்திரம் - கார்த்திகை
அவயோகி கிரகம் - சூரியன்
← முகப்பு