வைதிருதி

வைதிருதி நாம யோகம். இது அசுப நாம யோகம் ஆகும். வைதிருதி நாம யோகத்தில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தற்பெருமை உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பவர்கள். நல்லவர்கள் போல நடித்து ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன் கெடுக்கும் புத்தியும் இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள். நேர்மை இருக்காது. கடவுள் பக்தியை கூட வியாபாரம் ஆக்கி காசு பண்ணி விடுவார்கள். ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகம் உடையவர்கள். தீய பழக்கங்கள் இருக்கும்.

யோகி நட்சத்திரம் புனர்பூசம்

யோகி கிரகம் குரு

அவயோகி நட்சத்திரம் உத்திராடம்

அவயோகி கிரகம் சூரியன்

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு