பிராம்மியம் நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். தியானம் யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடு உடையவர்கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சி உடையவர்கள். ஞானிகள் யோகிகள் மகான்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். வேகத்துடன் செயல்படுவதும் தியாக உணர்வும் தர்ம சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வது உண்டு. யாகம் அன்னதானம் போன்றவற்றை செய்யக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
யோகி நட்சத்திரம் - மிருகசீரிஷம்
யோகி கிரகம் - செவ்வாய்
அவயோகி நட்சத்திரம் - மூலம்
அவயோகி கிரகம் - கேது
← முகப்பு