சித்தி நாம யோகம். இது சுப நாம யோகம் ஆகும். இந்த நாமயோகத்தில் பிறந்தவர்களுக்கு தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும். உபாசனை தெய்வத்தின் சித்தி இவர்களுக்கு எளிமையாக கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் விருப்பம் அதிகம் உடையவர்கள். கடுமையான பயணங்களை கூட இவர்கள் எளிமையாக மற்றும் மகிழ்ச்சியாக மேற்கொள்வது உண்டு. செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் மற்றும் இவர்களுக்கு நல்ல குணம் உதவும் மனப்பான்மை இருக்கும்.
யோகி நட்சத்திரம் - அவிட்டம்
யோகி கிரகம் - செவ்வாய்
அவயோகி நட்சத்திரம் - மகம்
அவ யோகி கிரகம் - கேது
← முகப்பு