விஷ்கம்பம்

விஷ்கம்பம் நாமயோகம். இது அசுப யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றி கொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும் எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ள துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை சற்றென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே உணரும் தீர்க்கதரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டம் இருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப் பிரியர்கள். சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார்.

யோகி நட்சத்திரம் - பூசம்

யோகி கிரகம் - சனி

அவயோகி நட்சத்திரம் - திருவோணம்

அவயோகி கிரகம் - சந்திரன்

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு