பால்வழி மண்டலத்தின் இயக்கத்தினால், அதனுள் இருக்கும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் சுழன்று கொண்டு உள்ளன. இந்த சுழற்சியின் காரணமாக அனைத்து ஜீவராசிகளுக்கும் சுகம் மற்றும் துக்கங்கள் ஏற்படுகின்றன.
கிரகங்கள் நட்சத்திரத்தின் வழியாக பயணம் செய்வதாகவும் அந்த நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
மேஷம் முதல் மீன வரை உள்ள 12 ராசிகளில் இடம்பெற்றுள்ள 27 நட்சத்திர மண்டலங்கள் வழியாக சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள் பயணம் செய்வதால் ஏற்படுத்தும் சுகம் மற்றும் துக்கங்களை அறிய உதவும் கணித சாஸ்திரமே ஜோதிட சாஸ்திரமாகும்.
ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும். ஆகாயத்தில் விளங்கக்கூடிய ஒளிகளான சூரியன், சந்திரன், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஒளி நகர்வை கொண்டு கணிதம் செய்து அதற்கான பலன்களை கூறுவது ஜோதிடம் ஆகும். ஒளிகளின் அடிப்படையிலான கணித சாஸ்திரம் ஜோதிடம் ஆகும்.
ஜோதிடத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை,