சஷ்டி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை சஷ்டி திதியின் அளவு 60 பாகை முதல் 72 பாகை வரை ஆகும். தேய்பிறை சஷ்டி திதியின் அளவு 240 பாகை முதல் 252 பாகை வரை ஆகும். சஷ்டி திதியின் கிரகம் சுக்கிரன் ஆவார். சஷ்டி திதியின் தேவதை முருகன். மேஷம் மற்றும் சிம்மம் ஆகிய இரண்டு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.

சஷ்டி திதியில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. வேலையில் சேர்வது
  2. பசு மாடு வாங்குவதற்கு மற்றும் விற்பதற்கு
  3. வீடு வாங்குவதற்கு மற்றும் விற்பதற்கு
  4. வாகனம் வாங்குவதற்கு மற்றும் விற்பதற்கு
  5. மருந்து தயாரித்தல்
  6. மருந்து உட்கொள்ளுதல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு