சதுர்த்தி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை சதுர்த்தி திதியின் அளவு 36 பாகை முதல் 48 பாகை வரை ஆகும். தேய்பிறை சதுர்த்தி திதியின் அளவு 216 பாகை முதல் 228 பாகை வரை ஆகும். சதுர்த்தி திதியின் கிரகம் புதன் ஆவார். சதுர்த்தி திதியின் தேவதை விநாயகர். ரிஷபம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.

சதுர்த்தி திதியில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. வதம் செய்தல்
  2. விஷ ஆயுதம் பிரயோகித்தல்
  3. அக்னி தொடர்பான செயல்களில் ஈடுபடுதல்
  4. மங்களகரமான காரியங்கள் செய்தால் ஒரு மாதத்தில் பின்னமாகும்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு