திருதியை

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை திருதியை திதியின் அளவு 24 பாகை முதல் 36 பாகை வரை ஆகும். தேய்பிறை திருதியை திதியின் அளவு 204 பாகை முதல் 216 பாகை வரை ஆகும். திருதியை திதியின் கிரகம் செவ்வாய் ஆவார். திருதியை திதியின் தேவதை அம்பாள். சிம்மம் மற்றும் மகரம் ஆகிய இரண்டு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.

திருதியை திதியில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. சங்கீதம்
  2. வாத்தியம்
  3. சகலவிதமான சித்திரம் தொடர்பான விஷயங்கள்
  4. வீடு கட்ட ஆரம்பித்தல்
  5. கிரகப்பிரவேசம்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு