துவிதியை

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை துவிதியை திதியின் அளவு 12 பாகை முதல் 24 பாகை வரை ஆகும். தேய்பிறை துவிதியை திதியின் அளவு 192 பாகை முதல் 204 பாகை வரை ஆகும். துவிதியை திதியின் கிரகம் சந்திரன் ஆவார். துவிதியை திதியின் தேவதை சக்கரத்தாழ்வார். தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.

துவிதியை திதியில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. முஞ்சிப்புல்லால் செய்ய வேண்டிய வேலைகள்
  2. திருமணம்
  3. பயணம்
  4. தேவதா பிரதிஷ்டை
  5. ஆபரணங்கள் தயாரித்தல்
  6. நகைகள் அணிதல்
  7. புஷ்டிகரமான காரியங்கள் செய்தல்
  8. வீடு கட்டுதல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு