திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். அமாவாசை திதியின் அளவு 348 பாகை முதல் 360 பாகை வரை ஆகும். அமாவாசை திதியின் கிரகம் ராகு ஆவார். அமாவாசை திதியின் தேவதை பிதுர் தேவதை. அமாவாசை திதியில் எந்த ராசியும் திதி சூனியம் அடைவது இல்லை.
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு