பௌர்ணமி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். பௌர்ணமி திதியின் அளவு 168 பாகை முதல் 180 பாகை வரை ஆகும். பௌர்ணமி திதியின் கிரகம் சனி ஆவார். பௌர்ணமி திதியின் தேவதை சந்திரன். பௌர்ணமி திதியில் எந்த ராசியும் திதி சூனியம் அடைவது இல்லை.

பௌர்ணமி திதியில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. ஹோமம் - யாகம்- வேள்வி
  2. மங்களகரமான காரியங்கள்
  3. புஷ்டி தரக்கூடிய மருந்துகளை உண்ணுதல்
  4. போர் செய்வதற்கு வேண்டிய காரியங்கள்
  5. திருமண நிச்சயதார்த்தம்
  6. சிற்பக் கலைகள்
  7. ஆபரணங்கள்
  8. தேவதா பிரதிஷ்டை

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு