சதுர்த்தசி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை சதுர்த்தசி திதியின் அளவு 156 பாகை முதல் 168 பாகை வரை ஆகும். தேய்பிறை சதுர்த்தசி திதியின் அளவு 336 பாகை முதல் 348 பாகை வரை ஆகும். சதுர்த்தசி திதியின் கிரகம் சுக்கிரன் ஆவார். சதுர்த்தசி திதியின் தேவதை கலிபுருஷன். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.

சதுர்த்தசி திதியில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. தொழில் தொடங்குவதற்கு
  2. பல் சீரமைத்தல்
  3. தைலம் தேய்த்தல்
  4. மாமிசம் புசித்தல்
  5. பயணம்
  6. வளர்பிறையில் மட்டும் திருமணம் சுப காரியங்கள் செய்யலாம்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு