திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை ஏகாதசி திதியின் அளவு 120 பாகை முதல் 132 பாகை வரை ஆகும். தேய்பிறை ஏகாதசி திதியின் அளவு 300 பாகை முதல் 312 பாகை வரை ஆகும். ஏகாதசி திதியின் கிரகம் செவ்வாய் ஆவார். ஏகாதசி திதியின் தேவதை தர்ம தேவதை. தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு