திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அளவை வைத்து கணக்கிடப்படுவதாகும். ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வான் மண்டலத்தில் கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. நீள் வட்டப்பாதையின் அளவு 360 பாகை ஆகும். ஜோதிடத்தில் வளர்பிறை திதிகள் 15 மற்றும் தேய்பிறை திதிகள் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு திதியின் அளவு என்பது 12 பாகை ஆகும். வளர்பிறை தசமி திதியின் அளவு 108 பாகை முதல் 120 பாகை வரை ஆகும். தேய்பிறை தசமி திதியின் அளவு 288 பாகை முதல் 300 பாகை வரை ஆகும். தசமி திதியின் கிரகம் சந்திரன். தசமி திதியின் தேவதை ஆதிசேஷன். சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய இரண்டு ராசிகள் திதி சூனியம் அடைகின்றன.
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு