விருச்சிகம்

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

விருச்சிக இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. ஸ்திரம் - நிலையானது
  2. மூலம்
  3. பெண் ராசி
  4. இரட்டை ராசி
  5. பிறப்பு உறுப்பு
  6. நெட்டை
  7. பிராமணன்
  8. சிரோதயம்
  9. பொன் நிறம்
  10. ஆற்றங்கரைகளில் உள்ள பொந்து
  11. பகலில் பலம்
  12. சௌமியத்தன்மை
  13. வடக்கு திசை
  14. மோட்சம்
  15. கார்த்திகை மாதம்
  16. நீர்
  17. சாராயம் காய்ச்சும் இடம்
  18. சாக்கடை
  19. சேறுகள் நாற்றம் மிகுந்த பகுதி
  20. சுடுகாடு
  21. இரசாயன பரிசோதனை கூடம்
  22. கிணறு
  23. கோமா நிலை
  24. ஒருவேலை கூட நடக்காமல் இருப்பது
  25. ஆப்ரேஷன் தியேட்டர்
  26. அமிலங்கள்
  27. மறைபொருள் ராசி
  28. வயதுக்கு மீறிய காதல்
  29. மௌனம்
  30. மனசுக்குள் வைத்து வேறு எதனையும் வெளிப்படுத்தாத ராசி
  31. அழுத்தமான ராசி
  32. தகப்பனுக்கு கஷ்டம் தரும் ராசி
  33. எளிதில் தனது பிரச்சனைகளை வெளியில் சொல்லாதவர்
  34. குடும்ப பற்றற்றவர்
  35. கடுமையான செலவாளி
  36. பிடிவாதமானவர்
  37. பொந்துகள்
  38. கழிவறைகள்
  39. அதிகாரங்கள்
  40. கோவில் அருகாமை
  41. வயது மாறுபாடு உள்ள காமம்
  42. இயற்கை பிளவுகள்
  43. பின்வாங்குவது
  44. குகைகள்
  45. பூமி பிளவுகள்
  46. சமையலறை
  47. பெட்டகங்கள்
  48. திராட்சை தோட்டங்கள்
  49. பூமிக்கு அடியில் உள்ள கட்டிடங்கள்
  50. பதுங்கு கட்டிடங்கள்
  51. பாம்புகள், பூச்சிகள் மற்றும் ஊர்வன நிறைந்த இடம்
  52. எறும்புகள் கொண்ட வனப்பகுதி
  53. பழத்தோட்டங்கள் 
  54. குளங்கள்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு