கன்னி

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

கன்னி இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. உபயம் - சரம்+ஸ்திரம் கலந்தது
  2. ஜீவன்
  3. பெண் ராசி
  4. இரட்டை ராசி
  5. தொப்புள்
  6. நெட்டை
  7. சூத்திரன்
  8. சிரோதயம்
  9. சித்திர வர்ணம்
  10. நல்ல விளையுள்ள வன சமீப பூமி
  11. பகலில் பலம்
  12. சௌமிய தன்மை
  13. தெற்கு திசை
  14. பொருள்
  15. புரட்டாசி மாதம்
  16. நிலம்
  17. மலட்டுராசி
  18. கல்விக்கூடங்கள்
  19. புத்தக அலமாரி
  20. பரதேச ஊர்
  21. நன்செய் புன்செய் நிலங்கள்
  22. நூல் நிலையம்
  23. வாயில் தோரணம்
  24. அறிஞர்கள் கூடும் இடம்
  25. வேதம்
  26. உணரும் ராசி
  27. ஞானவான்
  28. ஆன்மீகவாதி
  29. சந்தேகப் பேர்வழி
  30. ஊர் விட்டு ஊர் போதல்
  31. தண்டுவடம்
  32. மனித குணம்
  33. ஆசான்
  34. அதி புத்திசாலி
  35. நகரம்
  36. மருத்துவ இடம்
  37. விசாரணை நடக்கும் இடம்
  38. வேதசாலை
  39. கலைகள்
  40. அறிவியல்
  41. இலக்கியம்
  42. புல்வெளிகள்
  43. வங்கிகள்
  44. பரிமாற்றம் நடக்கும் இடங்கள்
  45. பெரிய உற்பத்தி நகரங்கள்
  46. இரகசிய அமைப்புகள்
  47. தொழிற்சாலைகள்
  48. விபச்சார விடுதிகள்
  49. கடல் மேற்பரப்பு
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு