சிம்மம்

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

சிம்ம இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. ஸ்திரம் - நிலையானது
  2. மூலம்
  3. ஆண் ராசி
  4. ஒற்றை ராசி
  5. வயிறு
  6. நெட்டை
  7. சத்திரியன்
  8. சிரோதயம்
  9. மங்கிய வெண்மை
  10. அடர்ந்த காடுகள் உள்ள மலை
  11. பகலில் பலம்
  12. குரூர தன்மை
  13. கிழக்கு திசை
  14. அறம்
  15. ஆவணி மாதம்
  16. நெருப்பு
  17. மிருக ராசி
  18. நாற்கால் ராசி
  19. பழைய கோட்டைகள்
  20. பெரிய வீடுகள்
  21. உயரமான இடங்கள்
  22. நிரந்தர வருமானத்தை தரக்கூடிய கட்டிடங்கள்
  23. மலைகள்
  24. எதையும் சாதாரணமாக புரிந்து கொள்ளாதவர்கள்
  25. மாடி வீடுகள்
  26. மலையும் மலை சார்ந்த இடங்களும்
  27. தொகுப்பு வீடுகள்
  28. அணுக முடியாத சிகரங்கள் மற்றும் பாறைகள்
  29. கொடூரமான மிருகங்கள் இருக்கும் காடுகள்
  30. அரண்மனைகள்
  31. நீட்டிப்புகள்
  32. உருக்குபவர்கள்
  33. அரசு நிறுவனங்கள்
  34. குகைகள் மற்றும் மலைகள்
  35. இரசாயன ஆய்வகங்கள்
  36. வெடி பொருட்கள்
  37. உற்பத்தி செய்யும் இடங்கள்
  38. வேட்டையாடும் இடங்கள்
  39. கண்ணாடி தொழிற்சாலைகள்
  40. விலங்குகள் மற்றும் பறவைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு