கடகம்

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

கடக இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. சரம் - நகரும் தன்மை கொண்டது
  2. தாது
  3. பெண் ராசி
  4. இரட்டை ராசி
  5. இதயம்
  6. சமம்
  7. சூத்திரன்
  8. பிருஷ்டோதயம்
  9. மங்கிய சிவப்பு
  10. நீர் உள்ள வாய்க்கால்
  11. இரவில் பலம்
  12. சௌமியத்தன்மை
  13. வடக்கு திசை
  14. மோட்சம்
  15. வீடு
  16. ஆடி மாதம்
  17. நீர்
  18. நிர்வாகம்
  19. நீர் பாங்கான இடம்
  20. நதி
  21. அடிக்குழாய்
  22. அரசியல்
  23. பாச உணர்ச்சி மிக்க ராசி
  24. பலகால் ராசி
  25. நீர் நிறைந்த இடங்கள்
  26. தொட்டிகள்
  27. சாகுபடி செய்யும் நிலங்கள்
  28. நீர்த்தேக்கங்கள்
  29. சதுப்பு நிலங்கள்
  30. புனித இடங்கள் 
  31. அழகிய இடங்கள்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு