மிதுனம்

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

மிதுன இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. உபயம் - சரம்+ஸ்திரம் கலந்தது
  2. ஜீவன்
  3. ஆண் ராசி
  4. ஒற்றை ராசி
  5. மார்பு
  6. சமம்
  7. வைசியன்
  8. சிரபிருஷ்டோதயம்
  9. பச்சை
  10. பூந்தோட்டத்துடன் கூடிய படுக்கை விடு
  11. இரவில் பலம்
  12. குரூர தன்மை
  13. மேற்கு திசை
  14. இன்பம்
  15. ஆனி மாதம்
  16. காற்று
  17. இரட்டைத்தன்மை
  18. மனிதத் தன்மை மிக்க ராசி
  19. காதல் உணர்ச்சிமிக்க ராசி
  20. தோள்பட்டை
  21. படிப்பின் மீது ஆர்வம்
  22. சம்போகிக்கும் இடம்
  23. பணத்தின் மீது தீரா ஆசை
  24. இசை
  25. பொழுதுபோக்கு கூடம்
  26. விபச்சார விடுதிகள்
  27. அழகான பெண்கள் மற்றும் துரோகிகள் அடிக்கடி வரும் குகைகள்
  28. தச்சர்கள்
  29. பூங்காக்கள்
  30. சூதாட்ட விடுதி
  31. திரையரங்குகள்
  32. நாடுகள்
  33. அச்சு
  34. நூலகம்
  35. களஞ்சியங்கள்
  36. சேகரிப்பு கிடங்கு 
  37. விமானங்கள்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு