கும்பம்

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

கும்ப இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. ஸ்திரம் - நிலையானது
  2. மூலம்
  3. ஆண் ராசி
  4. ஒற்றை ராசி
  5. கணுக்கால்
  6. குள்ளம்
  7. வைசியன்
  8. சிரோதயம்
  9. பழுப்பு நிறம்
  10. கிணற்றுக்கு அருகிலுள்ள குயவன் வீடு
  11. பகலில் பலம்
  12. குரூரத் தன்மை
  13. மேற்கு திசை
  14. இன்பம்
  15. மாசி மாதம்
  16. காற்று
  17. ஆராய்ச்சி மிகுந்த ராசி
  18. எதையும் ஏற்றுக் கொள்ளாத ராசி
  19. வியாபார ராசி
  20. அசாத்திய தைரியம்
  21. ரேடியோ
  22. தெனாவெட்டு
  23. இரத்த ஓட்டம்
  24. நடுநிசி
  25. ஆராயாமல் சம்மதிக்காதவர்
  26. சளி பிடிக்கும் ராசி
  27. யாரையும் நம்பாத ராசி
  28. ஏற்ற இறக்கமானது
  29. கற்பனை
  30. எதையும் பிரம்மாண்டமாக யோசித்தல்
  31. பிரம்மாண்டமாகவே பேசுதல்
  32. ஆடு மாடு கோழி பண்ணைகள்
  33. ஒரு கையில் வேலை செய்தல்
  34. பிடிவாதம்
  35. முரண்டு வாதம்
  36. அடிக்கழாய் அருகில்
  37. சதுப்பு நிலங்கள்
  38. தானியங்கள்
  39. துரோகிகள் கூடும் இடம்
  40. விபச்சாரிகள் மற்றும் மோசமான மனிதர்கள்
  41. சாராயக்கடை
  42. சூதாட்ட கூடங்கள்
  43. சுரங்கங்கள்
  44. வானூர்தி இயந்திரங்கள்
  45. குடிகாரர்கள்
  46. பிரபலமற்ற இடங்கள் மற்றும் வீடுகள்
  47. திராட்சைத் தோட்டங்கள் 
  48. குகைகள்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு