☋ கேது

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். கிரகங்கள் ஒருவரின் குணங்களையும் பண்பையும் வெளிப்படுத்தும். ஒரு கிரகத்துடன் மற்றொரு கிரகம் சேரும்போது அதன் குணங்கள் வேறுபடுவதை உணரலாம். உதாரணமாக தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலப்பது போல், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும்போது அதனுடைய குணங்களும் பண்புகளும் மாறுபடும். இங்கு தற்போது தனிப்பட்ட கிரகங்களின் குணங்களையும் பண்புகளையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் கிரக காரகத்துவம் என்று கூறுவார்கள்.

Navagraghas

கேதுவின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. தாய் வழி தாத்தா பாட்டி
  2. கருஞ்சிவப்பு
  3. துருப்பிடித்தல்
  4. வெளியூர்
  5. இழிவான குலத் தொழில்
  6. மாமிசம்
  7. சிறை தண்டனை
  8. குன்ம நோய்
  9. குடல் நோய்
  10. காயம்
  11. சொறி
  12. சிரங்கு
  13. உஷ்ணம்
  14. கீர்த்தி
  15. விபச்சாரம்
  16. ஞானம்
  17. மோட்சம்
  18. ஆணவம்
  19. தந்திரம்
  20. ஆன்மீகம்
  21. பிரிவு
  22. ஆராய்ச்சி
  23. முன்பிறவிகளின் அனுபவம்
  24. துறவு
  25. உள்ளார்ந்த அறிவு
  26. இரகசியங்கள்
  27. பொருளாதாரத்தில் இருந்து விலகுதல்
  28. சுய உணர்வு
  29. தியானம்
  30. கண்ணோட்டம்
  31. விடுதலை
  32. தனிமை
  33. இழப்பு
  34. துன்பம்
  35. உடல் நலம்
  36. பொருட்களிலிருந்து பிரிவு
  37. இரகசிய அனுபவங்கள்
  38. கர்ம பலன்கள்
  39. தப்பித்தல்
  40. ஆன்மீக வளர்ச்சி
  41. மறுபிறப்பு
  42. மறைக்கப்பட்ட திறன்கள்
  43. சுயநல்களுக்கான தியாகம்
  44. குழப்பம்
  45. மறைக்கப்பட்ட ஞானம்
  46. மறைந்திருந்து செயல்படும் தன்மை
  47. அறியப்படாதவற்றின் மீது ஆர்வம்
  48. தியாகங்கள்
  49. உயர்ந்த நோக்கத்தை நாடுதல்
  50. விடுதலைக்கு விருப்பம்
  51. மாற்று சிகிச்சைகள்
  52. கெடுதல்
  53. தவம்
  54. கடன்
  55. நோய்
  56. வழக்கு
  57. சட்டப்படியான அனைத்து செயல்களும்
  58. சிக்கலான அனைத்தும் கேது
  59. வழக்காடும் இடங்கள்
  60. மருந்து கடை
  61. தையல் கடை
  62. வழக்கறிஞர்கள் கூடும் இடம்
  63. நெசவு செய்யும் இடம்
  64. பின்னக்கூடிய இடங்களை குறிக்கும்
  65. விநாயகர்
  66. மனித முகம் இல்லாத தெய்வங்கள்
  67. வால் உள்ள தெய்வங்கள்
  68. மெல்லிய கம்பி போன்ற பொருள்கள்
  69. மின்சார கம்பிகள்
  70. நூலிழைகள்
  71. வெட்ட கூடிய பொருட்கள்
  72. கத்தி
  73. கத்திரிக்கோல்
  74. ஊசிகள்
  75. மூலிகை பொருட்கள்
  76. மருந்து பொருட்கள்
  77. ஆன்மீகப் பொருட்கள்
  78. பஞ்சாயத்து செய்தல்
  79. வைண்டிங் செய்தல்
  80. ஒயரிங் செய்தல்
  81. டைப்பிஸ்ட்
  82. அறுவை சிகிச்சையாளர்
  83. புகையிலை
  84. காபி கொட்டை
  85. தேயிலை வியாபாரம்
  86. மாந்திரீகம்
  87. கொலை செய்தல்
  88. சிமெண்ட்
  89. ரப்பர்
  90. வெளிநாட்டில் தஞ்சம் அடைதல்

இதுபோல் இன்னும் எண்ணற்ற காரகத்துவங்கள் கேதுவிற்கு உள்ளது.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு