🌙 சந்திரன்
ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். கிரகங்கள் ஒருவரின் குணங்களையும் பண்பையும் வெளிப்படுத்தும். ஒரு கிரகத்துடன் மற்றொரு கிரகம் சேரும்போது அதன் குணங்கள் வேறுபடுவதை உணரலாம். உதாரணமாக தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலப்பது போல், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும்போது அதனுடைய குணங்களும் பண்புகளும் மாறுபடும். இங்கு தற்போது தனிப்பட்ட கிரகங்களின் குணங்களையும் பண்புகளையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் கிரக காரகத்துவம் என்று கூறுவார்கள்.
சந்திரனின் காரகத்துவங்களை பார்ப்போம்:
- தாய்
- தாய் வழி உறவினர்கள்
- பெண்கள்
- வணிகர்கள்
- வெண்மை நிறம்
- இனிப்பு
- உப்பு
- நீர்நிலை
- மலர்கள்
- பழங்கள்
- முத்து
- வெண்மணிகள்
- நெல்
- தாவரங்கள்
- இலைகள்
- மூலிகைகள்
- வெள்ளி
- தகரம்
- குளியல்
- வாசனைப் பொருட்கள்
- தென் கிழக்கு
- வடமேற்கு
- திங்கட்கிழமை
- பால் பொருட்கள்
- உணவு வகைகள்
- ஆடை
- பருத்தித் துணிகள்
- ஆபரணங்கள்
- விவசாயம்
- செல்வம்
- புகழ்
- பரிசு
- கடற்கரை
- விளை நிலம்
- நீர்
- பிராணிகள்
- மனம்
- புத்தி
- சிந்தனை
- உடல் அழகு
- ஞாபகம்
- மறதி
- உடல்நலம்
- ஆசைகள்
- சிற்றின்பம்
- சத்வகுணம்
- இடது கண்
- சீதள நோய்கள்
- ஆஸ்துமா
- உணர்வுகள்
- மன உறுதி
- உள் உணர்வு
- நீர்நிலைகள்
- இரவு பொழுது
- பெண் சக்தி
- மன அமைதி
- கற்பனை
- உடனடியாக உணரும் திறன்
- குணம்
- கனவு உலகம்
- பொது வாழ்வில் புகழ்
- பிரதிபலிப்பு
- கருணை
- அன்பு
- கடந்த கால நினைவுகள்
- ஊட்டம்
- தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்
- பாதுகாப்பு
- நிகழ்ச்சிகளுக்கு எதிர்வினைகள்
- நுட்பமான உணர்ச்சிகள்
- நிலவின் சுழற்சி
- உறக்கம்
- சலனம்
- தேய்மானம்
- திருடன்
- கெட்ட பெயர்
- அவமானம் தரும் காரியங்கள்
- இலவச பொருட்கள்
- சந்தேகம்
- நீரினால் கண்டம்
- திருமணத்திற்கு பின் மாமியார்
- பொதுமக்கள்
- பொதுப்பணித்துறை அலுவலர்கள்
- கவிஞர்கள்
- கற்பனைத் திறன் மிக்கவர்கள்
- கதை ஆசிரியர்கள்
- இரத்த ஓட்டம்
- தாய்ப்பால்
- உணர்ந்து அறியும் தன்மை
- கர்ப்பப்பை
- மாதவிடாய் தொடர்பான அனைத்து நோய்களும்
- நுரையீரல்
- மார்பு
- உடலின் நீர் சத்து
- சளி
- நீரோட்டம் உள்ள இடம்
- படுக்கை அறை
- பயண கோலம்
- அம்பாள்
- அலங்காரம் இல்லாத பெண் தெய்வங்கள்
- அன்றாடம் அழியக்கூடிய பொருட்கள்
- மளிகை பொருட்கள்
- பால் போன்ற நீர்மப் பொருள்
- உரம்
- மாலுமி
- மதுபானம்
- வண்ணார் வேலை
- விளம்பர தொழில்
- மீன் கருவாடு வியாபாரம்
- கடலில் இருந்து கிடைக்கும் பொருட்களால் லாபம்
- பிளம்பர்
இதுபோல் இன்னும் எண்ணற்ற காரகத்துவங்கள் சந்திரனுக்கு உள்ளது.
← முகப்பு