☀ சூரியன்
ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். கிரகங்கள் ஒருவரின் குணங்களையும் பண்பையும் வெளிப்படுத்தும். ஒரு கிரகத்துடன் மற்றொரு கிரகம் சேரும்போது அதன் குணங்கள் வேறுபடுவதை உணரலாம். உதாரணமாக தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலப்பது போல், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும்போது அதனுடைய குணங்களும் பண்புகளும் மாறுபடும். இங்கு தற்போது தனிப்பட்ட கிரகங்களின் குணங்களையும் பண்புகளையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் கிரக காரகத்துவம் என்று கூறுவார்கள்.
சூரியனின் காரகத்துவங்களை பார்ப்போம்:
- 1. தந்தை
- 2. தந்தை வழி உறவினர்கள்
- 3. அரசன்
- 4. அரச குலத்தை சேர்ந்தவர்கள்
- 5. மருத்துவம்
- 6. சிவப்பு நிறம்
- 7. தீயவர்கள்
- 8. காரம்
- 9. நெருப்பு
- 10. மாணிக்க கற்கள்
- 11. கோதுமை
- 12. தேன்
- 13. அரசாங்கம்
- 14. அரசு வேலை
- 15. விதை
- 16. மரம்
- 17. காடு
- 18.ஞாயிற்றுக்கிழமை
- 19. கிழக்கு திசை
- 20. மூளை
- 21. ஆன்மா
- 22. ஆத்ம சக்தி
- 23. துணிவு
- 24. வெற்றி
- 25. வலது கண்
- 26. தலை
- 27. எலும்பு
- 28. பித்தம்
- 29. அதிகாரம்
- 30. அகங்காரம்
- 31. உடல் உற்சாகம்
- 32. சுய அடையாளம்
- 33. தலைமைத்துவம்
- 34. படைப்பாற்றல்
- 35. புகழ்
- 36. தன்னம்பிக்கை
- 37. மன உற்சாகம்
- 38. ஆற்றல்
- 39. பெருமை
- 40. கவர்ச்சி
- 41. கண்ணியம்
- 42. நேர்மை
- 43. புகழ்பெற்ற அடையாளம்
- 44. தொழில் உயர்வு
- 45. தெளிவு
- 46. கண்ணோட்டம்
- 47. சுய வெளிப்பாடு
- 48. தனிப்பட்ட இலக்குகள்
- 49. ஆண்மை
- 50. வழிகாட்டி
- 51. ஒளி
- 52. இதய ஆரோக்கியம்
- 53. பகல் நேர செயல்பாடு
- 54. சுத்திகரிப்பு
- 55. சூடு மற்றும் வெப்பம்
- 56. முடிவை எடுக்கும் திறன்
- 57. பொது வாழ்வில் புகழ்
- 58. உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள்
- 59. சாதனைக்கான செயல்
- 60. உயர்ந்த குணம்
- 61. கௌரவம்
- 62. நம்பிக்கை
- 63. நிர்வாகம்
- 64. சத்ரியன்
- 65. மூத்த மகன்
- 66. திருமணத்திற்கு பின் மாமனார்
- 67. ஒற்றை தலைவலி
- 68. கண்ணின் கிட்ட பார்வை
- 69. சித்த பிரம்மை ஏற்படுதல்
- 70. தண்டுவடம்
- 71. முதுகு எலும்பு
- 72. காலின் பெருவிரல்
- 73. மலை மேடான பகுதி
- 74. கோட்டைகள்
- 75. மாடிப்படிகள்
- 76. வனவாசம்
- 77. நிரந்தர வருமானம் பெறக்கூடிய கட்டிடங்கள்
- 78. கூரை பந்தல்
- 79. குற்றம் தீர்க்க அரசு எடுக்கும் முடிவு
- 80. அரச தண்டனை
- 81. ஊரின் பெரிய மனிதர்கள்
- 82. ஆன்ம வழிபாடு
- 83. ஜோதி ரூபமான வழிபாடுகள்
- 84. சிவ வழிபாடு
- 85. வைரம் பாய்ந்த மரம்
- 86. வட்ட வடிவமான தங்க நகைகள்
- 87. மேலாளர்
- 88. நிர்வகிக்கும் தொழில்கள்
- 89. நெருப்பை கையில் கிடைக்கும் செய்யக்கூடிய தொழில்கள்
- 90. பொற்கொல்லன்
- 91. ஆபரண வியாபாரம்
- 92. ஊர் தலைவர்
- 93. குலதொழில்
இதுபோல் இன்னும் எண்ணற்ற காரகத்துவங்கள் சூரியனுக்கு உள்ளது.
← முகப்பு