அனைவருக்கும் வணக்கம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைவரும் புத்தாடை எடுத்து, வீட்டில் இனிப்பு பலகாரம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீங்க. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த ஜோதிட பதிவில பாத்தீங்கன்னா ஜாமக்கோள் பிரசன்னத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒருவர் அவருடைய காதலி பெயர் என்ன என்று என்னிடம் கேட்டார்.
சரியான பெயரை சொல்ல முடியாது ஆனால் பெயரின் அர்த்தத்தை ஜமாக்கோள் பிரசன்னத்தின் உதவியுடன் என்னால் கூற முடியும் என்று கூறினேன்.
பிரசன்னம் பார்க்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் உள்ள கிரக அமைப்பு மேலே உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். தனுசு உதயம், உதயத்தில் ஜாமச்சந்திரன் அமர்ந்து உள்ளார். சுக்கிரன் உச்சமடைந்த ஜாமம் ஆகும். உதய புள்ளி பூராட நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்து இருந்தது. எனவே நீர் சம்பந்தப்பட்ட பெயர் என்று அவரிடம் சொன்னேன். பூராடம் நட்சத்திரம் வருண பகவானை குறிக்கும். எனவே உங்கள் காதலி பெயர் "தண்ணீர்" என்ற அர்த்தத்தில் இருக்கும் என்று அவரிடம் கூறியிருந்தேன்.
நட்சத்திரங்களின் உருவம் தேவதை அதிதேவதை மரங்கள் பறவைகள் எழுத்துக்கள் போன்ற பல காரகத்துவங்களை நாம் தெரிந்து வைத்திருக்கும் போது பிரசன்னத்திற்கான பலனை நம்மால் கூற முடியும்.
பிரசன்னத்தின் மூலம் பலன் கூறுவதற்கு நமக்கு இறைவன் அருளும் குருவின் அருளும் பெற்றோர்களின் ஆசியும் பரிபூரணமாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு பிரசன்ன அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
-முஅ.சு.கார்த்தி
← முகப்பு