கடன் அடைக்கக் கூடிய நாட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

இந்த ஜோதிட பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இக்காலகட்டத்தில் கடன் இல்லாத நபர்களே கிடையாது. வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், கல்வி கடன் என தொடங்கி, வாஷிங் மெஷின் கடன், டெலிவிஷன் கடன் என அனைத்து பொருட்களையும் இ.எம்.ஐ மற்றும் கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்கி பெரும்பாலானோர் கடனாளியாக உள்ளனர். சிலர் கடனில் தத்தளித்து வருகின்றனர். இந்த கடன் பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு வெளியே வருவது என்று தெரியாமல் விழி பிதுங்கியும் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் படிப்படியாக கடனை அடைப்பதற்கு சில நாட்களை குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த பதிவு எழுதப்படுகிறது. கீழ்காணும் நட்சத்திரம், நாள் மற்றும் திதி சேர்ந்து வரக்கூடிய காலத்தில் குறிப்பிட்டுள்ள இலக்னத்தில் கடனின் சிறு தொகையை படிப்படியாக அழைத்து வரும்போது விரைவாக கடன் அடைபடும் என்று கூறப்பட்டுள்ளது.

நட்சத்திரம்: அஸ்வினி, அனுஷம்

திதி: சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி

இலக்னம்: மேஷம், விருச்சிகம் இலக்னத்திற்கு 8ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது போன்ற இயற்கை பாவ கிரகங்கள் இருப்பது நன்று.

கிழமை: ஞாயிறு, செவ்வாய், சனி

கரணம்: பத்திரை(விஷ்டி)

மேலே குறிப்பிட்டுள்ள திதி நட்சத்திரம் கிழமை கரணம் மற்றும் லக்னம் கூடிய நேரத்தில் கடனின் ஒரு பகுதியை திருப்பி கொடுக்கும்போது விரைவில் கடன் தீரும்.

குரு அருளும் இறை அருளும் நம்மை வழி நடத்துகிறது. மீண்டும் ஒரு ஜோதிட பதிவில் சந்திப்போம்.

-முஅ.சு.கார்த்தி

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு