சதுஷ்பாதம்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

சதுஷ்பாதம் கரணம் அமாவாசை திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும்.

சதுஷ்பாதம் கரணம் தன்மைகள்
தன்மை அசுபம்
மிருகம் நாய்
அதிபதி குரு
தெய்வம் பைரவர்
தேவதை மணிபத்திரன்
மலர் கொன்றை மலர்
ஆகாரம் தேன்
பூசுவது விபூதி
ஆபரணம் படிகமணி
தூபம் சந்தனப்பொடி
வஸ்திரம் தழை
பாத்திரம் மரப் பாத்திரம்
தன்மை ஸ்திரம்

சதுஷ்பாதம் கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. பசுக்கள் சம்பந்தமான காரியங்கள் செய்தல்
  2. அன்னதானம்
  3. தேவதா பூஜை
  4. புல் தரை அமைத்தல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு