கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.
விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.
பத்திரை கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதிகளில் அமைந்திருக்கும். வளர்பிறை சதுர்த்தி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை அஷ்டமி திதியில் முன் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை ஏகாதசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். பௌர்ணமி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை திருதியை திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சப்தமி திதியின் முன்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை தசமி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சதுர்த்தசி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும்.
| பத்திரை (விஷ்டி) கரணம் தன்மைகள் | |
|---|---|
| தன்மை | அசுபம் |
| மிருகம் | கோழி |
| அதிபதி | கேது |
| தெய்வம் | முருகன் |
| தேவதை | எமன் |
| மலர் | குன்றிமணிப்பூ |
| ஆகாரம் | சித்ரான்னம் |
| பூசுவது | கற்பூரம் |
| ஆபரணம் | புஷ்பராகம் |
| தூபம் | நல்ல நீர் |
| வஸ்திரம் | தோல் |
| பாத்திரம் | வெங்கலம் |
| தன்மை | சரம் |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு