வணிசை

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

வணிசை கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதிகளில் அமைந்திருக்கும். வளர்பிறை சதுர்த்தி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை சப்தமி திதியின் பின் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை ஏகாதசி திதியின் முன்பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை சதுர்த்தசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை திருதியை திதியின் முன்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சஷ்டி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை தசமி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை திரயோதசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும்.

வணிசை கரணம் தன்மைகள்
தன்மை அசுபம்
மிருகம் பசு, காளை
அதிபதி சூரியன்
தெய்வம் நந்தீஸ்வரர்
தேவதை ஸ்ரீதேவி
மலர் நீலலோசனம்
ஆகாரம் தயிர்
பூசுவது மஞ்சள்
ஆபரணம் வித்துரவம்
தூபம் சங்கு பொடி
வஸ்திரம் கம்பளி
பாத்திரம் பஞ்சலோகம்
தன்மை சரம்

வணிசை கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. உலோகப் பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்றல்
  2. தாது பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்றல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு