கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.
விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.
கரசை கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதிகளில் அமைந்திருக்கும். வளர்பிறை திருதியை திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை சப்தமி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை தசமி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை சதுர்த்தசி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை துவிதியை திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சஷ்டி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை நவமி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை திரயோதசி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும்.
| கரஜை கரணம் தன்மைகள் | |
|---|---|
| தன்மை | சுபம் |
| மிருகம் | யானை |
| அதிபதி | சந்திரன் |
| தெய்வம் | விநாயகர் |
| தேவதை | பூமி தேவி |
| மலர் | செம்பருத்தி |
| ஆகாரம் | பால் |
| பூசுவது | காசுக்கட்டி |
| ஆபரணம் | மாணிக்கம் |
| தூபம் | நீலவுண்டை |
| வஸ்திரம் | கருப்பு வஸ்திரம் |
| பாத்திரம் | ஈயம் |
| தன்மை | சரம் |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு