தைதுலம்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

தைத்துலை கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதிகளில் அமைந்திருக்கும். வளர்பிறை திருதியை திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை சஷ்டி திதியில் பின் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை தசமி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை திரயோதசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை துவிதியை திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை பஞ்சமி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை நவமி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை துவாதசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும்.

தைதுலம் கரணம் தன்மைகள்
தன்மை சுபம்
மிருகம் கழுதை
அதிபதி சுக்கிரன்
தெய்வம் தேஷ்டாதேவி
தேவதை பித்ருக்கள்
மலர் மல்லிகைப்பூ
ஆகாரம் அப்பம்
பூசுவது சோரோசனம்
ஆபரணம் வைரம்
தூபம் குங்குமம்
வஸ்திரம் மஞ்சள்
பாத்திரம் இரும்பு
தன்மை சரம்

தைதுலம் கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. சண்டைக்கு முயற்சித்தல்
  2. சண்டைக்கான பிரயாணம் செய்தல்
  3. சமாதானம் செய்தல்
  4. வியாபாரம் தொடங்குதல்
  5. குளம் வெட்டுதல்
  6. கிணறு வெட்டுதல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு