கௌலவம்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

கௌலவ கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதியில் அமைந்திருக்கும். வளர்பிறை துவிதியை திதியின் பிற்பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை சஷ்டி திதியின் முதல் பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை நவமி திதியின் பிற்பகுதியில் அமைந்திருக்கும். வளர்பிறை திரயோதசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை பிரதமை திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை பஞ்சமி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும். தேய்பிறை துவாதசி திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும்.

கௌலவம் கரணம் தன்மைகள்
தன்மை சுபம்
மிருகம் பன்றி
அதிபதி சனி
தெய்வம் வராகர்
தேவதை மித்திரன்
மலர் மகிழம்பூ
ஆகாரம் பணியாரம்
பூசுவது குங்குமம்
ஆபரணம் வெள்ளி
தூபம் வில்வப் பொடி
வஸ்திரம் கண்டாங்கி
பாத்திரம் செப்பு
தன்மை சரம்

கௌலவம் கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. புதிய வாகனங்கள் வாங்குதல்
  2. புதிய வாகனம் இயக்குதல்
  3. சகலவிதமான சுப காரியங்கள்
  4. சிநேகம் செய்து கொள்ளுதல்
  5. மந்திர காரியங்களை செய்தல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு