பாலவம்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

பாலவ கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதியில் அமைந்திருக்கும். வளர்பிறை துவிதியை விதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். வளர்பிறை பஞ்சமி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். வளர்பிறை நவமி திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். வளர்பிறை துவாதசி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை பிரதமை திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சதுர்த்தி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை ஏகாதசி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும்.

பாலவம் கரணம் தன்மைகள்
தன்மை சுபம்
மிருகம் புலி
அதிபதி ராகு
தெய்வம் ஐயப்பன்
தேவதை பிரம்மதேவன்
மலர் சிறு செண்பக மலர்
ஆகாரம் பாயாசம்
பூசுவது சந்தனம்
ஆபரணம் முத்து
தூபம் சந்தனப்பொடி
வஸ்திரம் சிவப்பு வஸ்திரம்
பாத்திரம் வெள்ளி
தன்மை சரம்

பாலவம் கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. மங்களகரமான காரியங்கள்
  2. உற்சவங்கள்
  3. பிரயாணம்
  4. வீடு சம்பந்தமான காரியங்கள்
  5. யுத்தம்
  6. அரச பட்டாபிஷேகம் செய்தல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு