கிம்ஸ்துக்கினம்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

கிம்ஸ்துக்னம் கரணம் வளர்பிறை பிரதமை திதியின் முன் பகுதியில் அமைந்திருக்கும்.

கிம்ஸ்துக்கினம் கரணம் தன்மைகள்
தன்மை அசுபம்
மிருகம் புழு
அதிபதி புதன்
தெய்வம் தன்வந்திரி
தேவதை வாயு தேவன்
மலர் கோங்கு மலர்
ஆகாரம் சர்க்கரை
பூசுவது ஜவ்வாது
ஆபரணம் முத்து
தூபம் குங்கிலியம்
வஸ்திரம் அரைச்சட்டை
பாத்திரம் மூங்கில்
தன்மை ஸ்திரம்

கிம்ஸ்துக்கினம் கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. புது அரிசியை உண்ண
  2. புதிய ஆபரணங்களை அணிய
  3. பூமி வாங்க
  4. சுபகரமான காரியங்களை செய்தல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு