பவம்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

பவக்கரணம் கீழ்காணும் விதிகளின்படி திதியில் அமைந்திருக்கும். வளர்பிறை பிரதமை திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். வளர்பிறை பஞ்சமி திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். வளர்பிறை அஷ்டமி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். வளர்பிறை துவாதசி திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். பௌர்ணமி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சதுர்த்தி திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை சப்தமி திதியின் பிற்பாதியில் அமைந்திருக்கும். தேய்பிறை ஏகாதசி திதியின் முதல் பாதியில் அமைந்திருக்கும்.

பவம் கரணம் தன்மைகள்
தன்மை சுபம்
மிருகம் சிங்கம்
அதிபதி செவ்வாய்
தெய்வம் நரசிம்மர்
தேவதை தேவேந்திரன்
மலர் புன்னை மலர்
ஆகாரம் அன்னம்
பூசுவது கஸ்தூரி
ஆபரணம் மாணிக்கம்
தூபம் அகில்
வஸ்திரம் வெண்மையான வஸ்திரம்
பாத்திரம் பொற்க்கலம்
தன்மை சரம்

பவம் கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. பயணம்
  2. நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய செயல்கள்
  3. தேவதா காரியங்கள்
  4. வஸ்திரம்
  5. தானியம்
  6. சுரங்கம் சம்பந்தமான காரியங்கள் செய்தல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு